2023 NEET EXAM : நீட் தேர்வு இன்று , மணிப்பூரில் தேர்வு ஒத்திவைப்பு

3 Min Read
நீட் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவ மாணவிகள்

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கடந்த 2013 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடத்தப்பட்டுவருகிறது .

- Advertisement -
Ad imageAd image

எம்பிபிஎஸ் ,பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட அணைத்து இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test) ஆண்டுதோறும் மத்திய அரசின் தேசியத் தேர்வுகள் முகமை நடத்திவருகிறது . இந்தத் தேர்வை எழுதுபவர்கள் மட்டும் தான்  இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் பங்குபெற முடியும் என்ற நிலை உள்ளது .

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு மே 7 ம் தேதி  (இன்று) மதியம்  2 மணிக்கு நடைபெற உள்ளது . நீட் தேர்வை எழுத தமிழ்நாட்டில் 1 .5 லட்சம் மாணவ மாணவிகள் உற்பட இந்தியா முழுவதும் 18 லட்சத்து 72  ஆயிரம் மாணவ மாணவிகள்  நாடு முழுவதும் 499 நகரங்களில் நீட் தேர்வு எழுத உள்ளனர் .

தமிழகத்தை பொறுத்தவரை 14 ஆயிரம் மாணவ மாணவிகள் அரசு பள்ளியில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

நீட் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவ மாணவிகள்

நீட் தேர்வு தொடர்பான அனைத்து முன்னறிவுப்புகளும் மாணவ மாணவியருக்கும் இணையதளம் வாயிலாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது . நாடு முழுவதும் இன்று மதியம் சரியாக 2 மணி ஆரம்பிக்கப்படும் நீட் தேர்வு மாலை மாலை 5.20 மணி வரை  தேர்வு நடைபெறவுள்ளது .

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில் வன்முறை சூழ்ந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் மற்றும் இன்று நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது  .

மணிப்பூரில் தற்பொழுது தேர்வு நடத்தமுடியாத சூழல் உள்ளதால் அந்த மாநிலத்திற்கு தனியே தேர்வு நடத்தப்படும் என்றும் . தேர்வுக்கான தேதி நிலைமை கட்டுக்குள் கொண்டுவந்தபிறகு அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வி இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அறிவித்துள்ளார் .

தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகள் பின்பற்ற வேண்டியவை :

இன்று மதியம் 2  மணிக்கு தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவ மாணவிகள் அவர்களது தேர்வு மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வர வேண்டும். மேலும் தேர்வு எழுதிவரும்  மாணவ , மாணவிகள் மோதிரம், மூக்குத்தி , பெல்ட் , தாயத்து  உள்ளிட்டவை அணிந்து தேர்வு அறைக்கு செல்ல அனுமதியில்லை.

முழுக்கை ஆடைகள் , மதம் மற்றும் கலாசாரம் சார்ந்த ஆடைகளையும் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . உயரம் குறைந்த ஹீல்ஸ் செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும்.

வழக்கம் போல ஹை ஹீல்ஸ் ஷூ , செல்போன் மற்றும் அனைத்து வகையிலான எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வர  தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் அனுமதிப்பதற்கு முன் மாணவ மாணவிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை முற்றிலுமாக தெரிந்துகொள்ள 011- 40759000 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது neet@nta.ac.in இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது .

Share This Article
Leave a review