அறிமுகம் செய்த 6 ஆண்டுகளுக்குள் புதிதாக புழக்கத்தில் விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை கிளீன் நோட் பாலிசி என்ற அடிப்படையில் பயன்பாட்டிலிருந்து நீக்குவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது . ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு நாடு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .
கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிப்பதற்காக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு , அதிரடியாக அப்போது புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது .
செல்லாது என்று அறிவித்த 500 , 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய வடிவிலான 2,000, 500 , 200 , 100 , 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் 1000 நோட்டுகள் முற்றிலுமாக புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது .
இதன்படி 2016 – 2020 ஆம் ஆண்டுகள் வரை மொத்தம் 27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் .
எனினும் ஏடிஎம் இயந்தரங்களில் 2000 நோட்டுகளை காண்பது மிகவும் அரிதாக இருந்தது . வங்கிகளிலும் மிகையும் குறைந்த அளவிலே 2000 நோட்டுகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கப்பெற்றது .

2000 ரூபாய் நாடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவந்த நிலையில் நேற்று (மே 19 ) கிளீன் நோட் பாலிசி திட்டத்தின் கீழ் , 2000 நோட்டுகளை புழக்கத்திலுந்து நீக்குவதாகவும் , பொதுமக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும் , அப்படி இல்லையென்றாலும் தாங்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து விட்டு வேறு தற்போது புழக்கத்திலுள்ள 500 , 200 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது .
இந்த நடவடிக்கை 2016 -ம் ஆண்டில் நிலவிய பணமதிப்பிழப்பு தற்போது முறைந்துள்ளதாலும் , பொதுமக்களின் பண பரிமாற்றத்திற்கு போதுமான அளவில் 500 , 200 , 100 ரூபாய் நோட்டுகள் இருப்பதாலும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 நோட்டுகள் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து , பல்வேறு தரப்பட்ட மக்களும் இதற்கு வருத்தமும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர் . இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் , எதிர்பார்த்தது போலவே, அரசாங்கம்/ஆர்பிஐ ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு ஒரு தகுதியான பரிமாற்ற முறை அல்ல.
இதை நாங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2000 ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும்போதே சரியாக கணித்து கூறியிருந்தோம் அது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது .
2000 நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள சம்பவம் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றே . 1000 ரூபாய் நோட்டை அரசாங்கம்/ஆர்பிஐ மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என்று அவர் பதிவு செய்துள்ளார் .