உதயநிதிக்கு ஆண்டுக்கு 2000ம் கோடியா? அண்ணாமலை பகிரங்க குற …

1 Min Read
உதயநிதி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை நேற்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது திமுக குடும்பம் 5600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக புகார் அளித்த அண்ணாமலை அதுதொடர்பான ஆதாரங்கள் என்று சில ஆவணங்களை இரும்பு பெட்டியில் வைத்து வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

தொடர்ந்து இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டார் அண்ணாமலை. அதில் போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். போக்கு வரத்து துறையில் Reflective tapes மற்றும் Rear Marking plates வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை போலி நிறுவன பெயர்களில் கொள்முதல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறைகேட்டின் மூலம் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வசூலித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்குவது தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கரின் வேலை
என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வீடியோவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு பிரதிபலனாக அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கரின் மனைவி நடத்தும் மருத்துவமனைக்கு அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்றும் அண்ணாமலை தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் ELCOT நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈடிஎல் நிறுவனம் தற்போது தனியார் கைக்கு மாறியுள்ளதாகவும் , இதில் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை தனது திமுக ஃபைல்ஸ் 2 வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் நெருக்கடியில் உலாவிக் கொண்டிருக்கும் திமுக-வுக்கு இது மேலும் அடியைக் கொடுக்குமா,வரும் நாடளுமன்றத் தேர்தலில் ஓட்டு வங்கி பாதிப்படையுமா,என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share This Article
Leave a review