மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது 5 வாகனங்கள் பறிமுதல்- விக்கிரவாண்டி போலீஸ்.

1 Min Read
கைது செய்யப்பட்டவர்கள்

விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து விக்கிரவாண்டி பகுதியில் வாகனங்கள் திருடுபோவதாக வந்த புகாரின் அடிப்படையில், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மதுரப்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேலூர் கோட்டை பின்புறம் பகுதியில் உள்ள சம்பத்நகரை சேர்ந்த தாமு என்ற தாமோதரன்(வயது 28), அசோக்குமார்(34) என்பதும் மோட்டாா் சைக்கிளை திருடி வந்ததும்,தெரியவந்தது.

விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தெரு, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, வீடூர், கப்பியாம்புலியூர் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தாமோதரன், அசோக்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Share This Article
Leave a review