ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல்.10 பேர் பலி.. பலர் காயம்..

2 Min Read
ஆந்திரா ரயில் விபத்து

8 பேர் பலி

- Advertisement -
Ad imageAd image

இந்த துயர நிகழ்வில், 10 பேர் மரணமடைந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் விபத்துக்களானது. இந்த துயர நிகழ்வில், 10 பேர் மரணமடைந்துள்ளார். 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்.

குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ராயக்கட்ட எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டது. மேலும் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் காயமடைந்து அலறி துடித்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விஜயநகரத்திலிருந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். இருட்டு மற்றும் மின்சார வயர் அறுந்து விழுந்தது ஆகிய காரணங்களால் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

10 பேர் பலி

ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – அவசர உதவி எண் அறிவிப்பு.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர ரயில் விபத்தில் 10 பேர் மரணமடைந்துள்ளார்; பலர் படுகாயமடைந்துள்ளனர்.அவர்கள் குடும்பங்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது ஆந்திர அரசு.

இதற்கிடையே ரயில் விபத்தை தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீட்புப் பணியை வேகமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ‛‛ரயில் விபத்து எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாகப்பட்டினம் மற்றும் அனகாபல்லி மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை அவ்வப்போது தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்துகொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. BSNL 08912746330, 08912744619 Airtel – 8106053051, 8106053052 BSNL – 8500041670, 8500041671

Share This Article
Leave a review