பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”இன்று வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் அனைவரும் அடுத்தடுத்த நிலைகளுக்கு தங்களை உயர்த்தி கொண்டு,உச்சங்களை தொட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
தேர்வு முடிவுகள் எதுவாயினும் மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொண்டு வருங்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். அவர்கள் அனைவரும் உயர் கல்வியில் சேர்ந்து உச்சத்தை தொட எனது நல்வாழ்த்துகள்.
தேர்ச்சி பெறாதவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றி பெற்று, இந்த ஆண்டே உயர் கல்விப் படிப்பில் சேர்ந்து சாதனைகள் புரிய எனது நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.