TN Results: +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…

1 Min Read
+2 தேர்வு எழுதிய மானார்கள்

+2 தேர்வு எழுதிய மாணர்கள் (மார்ச்-ஏப்ரல் 2023)  பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 08.05.2023 இன்று  அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

மேலும், தேர்வு முடிவுகளை பார்க்க தேவையான இணையதள முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் துவங்கிய மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு ஏப்ரல் முதல்வாரம் வரை நடைபெற்றது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீட் தேர்வு பாதிக்காத வகையில் மாணவர்களுக்கு எந்த மனஅழுத்தமும் ஏற்படாமல் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வருகின்ற மே மாதம் 8ம் தேதி காலை 9.30 மணியளவில் கீழ்காணும் இணையதளங்கள் வாயிலாக மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், அந்தந்த மாவட்ட நூலகம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களின் பள்ளிகளின் வாயிலாகவும் இலவசமாக தேர்வு முடிவுகள் அறிந்துகொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலமாக  மாணவர்கள் தங்களது ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in

Share This Article
Leave a review