மாவட்ட நீதிபதி பதிவிகளுக்கான முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் பார் கவுன்சில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் இணைந்து நடத்திய பயிற்சியில் படித்த 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 50 மாவட்ட நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி வெளியானது. இந்த பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி நடந்தது. இந்த முதல் நிலை தேர்வுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சைதை. துரைசாமியின் மனிதநேய கட்டணயில்லா கல்வியகத்துடன் இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
இதில் ஏராளமானோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த நிலையில் மாவட்ட நீதிபதிகளுக்கான முதல் எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சைதை. துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா கல்வியகம் இணைந்து நடத்திய பயிற்சி மையத்தில் படித்த 37 வக்கீல்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பார் கவுன்சில் தலைவர் பி. எஸ். அமல்ராஜ் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை. துரைசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் முதன்மைத் தேர்வு அடுத்த மாதம் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சைதை. துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா கல்வி இயக்கம் இணைந்து பார் கவுன்சில் ஆடிட்டோரியகத்தில் பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது.

இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் எண்.28 முதல் பிரதான சாலை சி.ஐ.டி நகர் சென்னை – 35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேயம் கட்டணமில்லா ஐ.ஏ.எஸ் கல்வியகத்துக்கு நேரிலோ, என்ற எண்கள் வாயிலாகவோ, என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, என்ற இணையதளம் வாயிலாகவோ, விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி வருகிற 15 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் பார் கவுன்சில் ஆடிட்டோரியகத்தில் பயிற்சி நடைபெறும் என்று பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை. துரைசாமி தெரிவித்தனர்.