ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஒரு அமைச்சரல்ல நான்கு அமைச்சர் வரட்டும் நேரடியாக விவாதிக்க தயார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் அமைச்சரால் மிரட்டப்படுகிறார்கள்- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிகாரிகளை ஒரு அமைச்சர் மிரட்டி வருகிறார். அமைச்சருக்கு அதிகாரிகள் பயந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பு இல்லை. அதேபோன்று உயிரிழந்த 15,000 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர் உடனடியாக தேர்தல் ஆணையம் அவற்றை நீக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடக்கும்.சாதிவாரியான கணக்கெடுப்பு பற்றி சட்டசபையில் முதல்வர் தவறான தகவலை தருகிறார். 1982ல் அம்பாசங்கர் ஆணையம் சாதிவாரி கணக்கெடுத்த போது உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது. 2008 ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற எதிர்க்கவில்லை. மாநிலத்தின் உரிமைகளுக்காகவே கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கு நீதி மன்றங்கள் தடை விதித்தது கிடையாது. மத்திய அரசுதான் கணக்கெடுக்க வேண்டும் என்பது வன்னியர்களுக்கு எதிரான வன்மம் இதை முதல்வர் அறிவிக்கிறார்.
20% வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த போது நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டன. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். முதல்வர் தரவுகள் இல்லை என்கிறார். அமைச்சர் சிவசங்கர் தரவு இருக்கு என்கிறார். இதில் யார் பொய் சொல்லுகிறார்கள் இது சாதிப்பிரச்சனை அல்ல சமூக நீதிப் பிரச்சனை இதற்காக அனைத்து சமூக மக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம். கள்ளக்குறிச்சியில் 63 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 23 பேர் உயிரிழந்த நிலையில் இந்த உயிரிழப்பு தொடர்கிறது. கிராமங்களில் இன்னமும் சாராயம் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மீது 302 கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டும் சிபிசிஐடி மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

எம்எல்ஏ இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும், அங்கு பொறுப்பு அமைச்சராக உள்ளவரை முதல்வர் பதவி விலக சொல்ல வேண்டும். இட ஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக பேசுவதற்கு ஒரு அமைச்சர் அல்ல நான்கு ஐந்து அமைச்சர்கள் கூட வரட்டும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே சமூக நீதிக்காக குரல் கொடுத்த டாக்டர் ராமதாஸ். இந்தியாவில் இரண்டும், தமிழ்நாட்டில் நான்கு இட ஒதுக்கீடுகளையும் பெற்றுக் கொடுத்தவர் ராமதாஸ். எதிர்க்கட்சிகளின் குரல்கள் சட்டசபையில் நசுக்கப்படுகிறது என்று பேசினார்.