அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான விடுமுறையுடன் கூடிய சம்பளம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது .
வருகிற மே மாதம் 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை , 15 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது .
இது குறித்து தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றது . இதன் மூலம் 2 வயதிலிருந்து 6 வயதிற்கு உட்பட்ட 25 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்து வருகின்றனர் .
இந்த குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநிலஅரசுகளின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 300 நாட்களுக்கு குறையாமல் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் சத்துணவு மற்றும் மதிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது .

வருடாந்திர கோடை விடுமுறையாக முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள் மே 2 வது வாரமும் , உதவியாளர்களுக்கு 3 வைத்து வாரமும் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4 வது வாரமும் சுயற்சி முறையில் விடுமுறை அளிக்கபட்டு வந்தது .
இந்த சுழற்சி முறையின் மூலம் குழந்தைகளுக்கு சத்துணவு தடையின்றி கிடப்பதை உறுதி செய்யப்பட்டது .
இந்நிலையில் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு , அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 15 நாட்கள் விடுமுறையுடன் கூடிய விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது .
இந்த 15 நாட்கள் விடுமுறையின் போது குழந்தைகளுக்கு வழங்க கூடிய ஊட்டச்சத்து முற்றிலும் பாதிக்காத வண்ணம் , குழந்தைகளுக்கு சத்துமாவு வரையில் மொத்தமாக கொடுத்து அனுப்ப வழிவகை செய்துள்ளது .
இதன்படி இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் 50 கிராம் சத்து மாவை 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 15 நாட்களுக்கான 750 கிராம் சத்துணவை வீட்டிற்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் மே 9ஆம் தேதி பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
தமிழக அரசின் இந்த அறிவிப்பு அங்கன்வாடி பணியாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .