14 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் சொல்லொன்னா துயரத்தை ஏற்படுத்தியது.உலக நாடுகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை,ஐ.நா சபை கூட அதை தடுக்க முன்வரவில்லை.லட்சக்கணக்கில் தமிழர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலையின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடந்தது. உலக பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் ஈழப்போரில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் | தமிழ் ஆர்வலர்கள், தமிழீழ உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.
நினைவேந்தல் கூட்டத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.