மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந …

2 Min Read

மேட்டூர் அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி. குறுவைக்கு இந்த தண்ணீர் தேவையில்லாததால் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும், சம்பா தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

- Advertisement -
Ad imageAd image

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடி மற்றும் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணை நீரை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணை நீரை திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட இருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை நெருங்கி வரும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஈரோடு, கரூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. இதற்கு டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து டெல்டா விவசாயிகள் கூறுகையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மூலமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தண்ணீர் ஆனது குறுவை சாகுபடிக்கு எந்த விதத்திலும் பயனாக இருக்காது. எனவே சம்பா சாகுபடி பணிகள் தொடங்குவதற்கு முன்பு திறக்கப்படும் தண்ணீரை கொண்டு, டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரி – குளங்களை நிரப்ப வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தண்ணீரை வீணாக்காமல் ஏரி – குளங்களில் தண்ணீர் நிரப்படுகிறதா என பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஏரி – குளங்களை நிரப்பினால், சம்பா சாகுபடி என்பது ஆற்றுப் பாசனத்தை நம்பி ஒருபுறமும், ஏரி பாசனங்களை நம்பி மறுபுறமும் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர் என தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை சாகுபடி பொய்த்து போன நிலையில், சம்பா சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி விவசாய கடன் வழங்க வேண்டும், குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்து போல சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Article
Leave a review