சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவின் ஆர்னபூர் என்ற பகுதியில் ,மாவோயிஸ்ட்டுகள் நடத்திய IED வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த 10 பாதுகாப்புப் படையினர் மற்றும் ஒரு வாகன ஓட்டுநர் கொல்லப்பட்டனர்.
தண்டேவாடாவின் அரன்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு வீரர்கள் அங்குச் சென்று , அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேடுதல் பணியை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புப் படையினரின் வாகனம் , மாவோயிஸ்ட்டுகள் புதைத்து வைத்திருந்த IED வெடிகுண்டு மீது ஏறி வெடித்துச் சிதறியது .இந்த வெடிகுண்டினை யாரும் கண்டுபிடிக்காத முடியாத வண்ணம் , மாவோயிஸ்ட்டுகள் தார்ச் சாலையின் உட்புறம் புதைத்து வைத்துள்ளனர் .
இந்த கோரத் தாக்குதலில் 10 டிஆர்ஜி வீரர்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தின் ஓட்டுநர் என மொத்தம் 11 வீரர்கள் பரிதமபாக கொல்லப்பட்டனர்.வெடிகுண்டு நடந்த பகுதி சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரிலிருந்து சுமார் 400 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பத்து பாதுகாப்புப் படை வீரர்கள் சந்தோஷ் தமோ, ஹரிராம் மாண்டவி, ஜோக சோதி, ஜோக கவாசி, முன்னா ராம் கட்டி, துக்லோ மாண்ட்வி, ராஜு ராம் கர்தம், லக்மு மார்க்கம், ஜெய்ராம் பொடியம், ஜகதீஷ் கவாசி மற்றும் ஓட்டுநர் தானிராம் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இச்சம்பவம் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் செய்தியாளர்களிடம் பேசியபொழுது தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்ட்டுகளை விட்டுவைக்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார் .