அமித் ஷா நிகழ்ச்சியில் வெயிலின் தாக்காதல் 11 பேர் பலி …

2 Min Read
நிகழ்ச்சியில் பொதுமக்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கெடுத்த நிகழ்ச்சியில் , வெயிலின் தாக்கத்தால் , 11 பேர் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரசு சார்பில் போதிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்று எதிர் காட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர் .

- Advertisement -
Ad imageAd image

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மாநில அரசு விருது  வழங்கும் விழா நடந்தது. நவிமும்பை கார்கரில் உள்ள பிரமாண்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பையில் திறந்த வெளியில் பூஷன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமித் ஷா தலைமையிலான இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அடுத்தடுத்து நூற்றுக்கும் அதிகமானோர் சுருண்டு விழுந்து மயங்கினர்.

அமித் ஷா

அவர்களில் 1 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

காலை 11.30 மணியளவில் துவங்கிய இந்த விழாவிற்கு காலை முதலே மக்கள் கூடத் துவங்கினர். 306 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் மக்களுக்கு கொட்டகைகள் ஏதும் ஏற்பாடு செய்யாமல் திறந்த வெளியில் இந்நிகழ்வு நடந்தது. வெயிலின் தாக்கத்தால் பலர் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டனர். அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் இருந்த மருத்துவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பல்வெல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 24 பேருக்கு தொடர் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அவரது மகன் ஆதித்யா தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்ரே ”நான் 4 முதல் 5 பேரிடம் கலந்துரையாடினேன். அவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அரசு நிகழ்ச்சி முறையாக திட்டமிட்டு நடத்தப்படவில்லை. இதனை யார் விசாரிக்கப்போகிறார்கள்” என கேள்வி எழுப்பினார்.

Share This Article
Leave a review