100 ஆண்டு கால பழமைவாய்ந்த பாம்பன் பாலம்! புதிய பாலம் டிசம்பரில் திறக்கப்படுகிறதா?

3 Min Read

மிக நீள கடல் பாலம்;

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தின் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டுமானப் பணி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரவுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பாம்பன் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் 110 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. இந்த பாலம் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்தரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. ஏறத்தாழ 2.3 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலமாக விளங்குகிறது. 2010ஆம் ஆண்டு மும்பையில் பாந்த்ரா- வொர்லி கடற்பாலம் திறப்பதற்கு முன்பு வரை இதுதான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருந்தது. 1988 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துப் பாலம் திறக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு பாம்பன் ரயில் பாலத்தை கட்டும் பணிகள் தொடங்கின.

ரயில்கள் நிறுத்தப்பட்டது;

2022 ஆம் ஆண்டு டிசம்பரில் கடல் அரிப்பின் காரணமாக இந்த ரயில் பாலம் பலவீனமடைந்ததால் பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டன. கடந்த 2009ஆம் ஆண்டில் அதிக எடையுள்ள சரக்கு ரயில்களை தாங்கும் வகையில் பாலத்தை பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ரூ. 550 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலமானது கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2,065 மீட்டர் நீளமானது. இங்கு 143 தூண்கள் உள்ளன. இந்த கடல் பாலத்தில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக நடுவில் திறக்கும் கத்திரி வடிவ தூக்குகள் அமைந்துள்ளன. பாலத்தின் இரு தூக்குகளும் நெம்புகோல்களை பயன்படுத்தி கையால் திறக்கப்படுகின்றன.

மாதம் 10 பெரிய கப்பல்கள்

மாதந்தோறும் 10 பெரிய கப்பல்கள் இந்த பாலத்தின் கீழே செல்லும். பாம்பன் பாலம் இந்தியாவின் நிலப்பரப்பையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது. இந்த ரயில் பாதை இரண்டாக இருந்தது. ஒன்று ராமேஸ்வரத்தில் முடிவடைந்தது. இன்னொரு தனுஷ்கோடியில் முடிவடைந்தது. ஆனால் 1964 ஆம் ஆண்டு சூறாவளியின் போது தனுஷ்கோடிக்கான ரயில் பாதை முற்றிலும் அழிந்தது. இந்த தூக்கு பாலம் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் லிப்ட் வடிவ தூக்கு பாலம் வடிவமைத்து இதை நடுவே பொருத்த மார்ச் 13 ஆம் தேதி முதல் நகர்த்தி வருகிறார்கள். ஆசியாவில் முதல் லிப்ட் முறையில் இயங்கும் இந்த பாலம் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் 17 மீட்டருக்கு திறந்து மூடப்படுகிறது. அதாவது இதற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு இணையான உயரத்திற்கு திறந்து மூடப்படும். . பாம்பன் பாலத்தின் கிழக்கு பகுதியில் 500 மீட்டர் தூரத்தில் 23 கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகளும் தூக்கு பாலத்தை பொருத்தும் பணிகளும் நிறைவடைந்து இந்த ஆண்டு டிசம்பருக்குள் பாலம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கர்டர்கள் லக்னோ ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையில் பாலத்தின் கர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்திரக்குடி ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அங்கிருந்து லாரி மூலம் கர்டர்கள் தூக்கு பாலத்தின் தூண்களை கொண்டு வந்து பாம்பனில் பொருத்தப்பட்டது.

 

Share This Article
Leave a review