சினிமாவில் 10 ஆண்டுகள் : ரசிகர்களுக்கு நன்றி – கீர்த்தி சுரேஷ்..!

2 Min Read
கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் “கீதா அஞ்சலி” படம் மூலம் நாயகியாக அறிமுகமானர். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். ”நடிகையர் திலகம்” படத்தில் மறைந்த நடிகை சாவித்திரியாக நடித்து தேசிய விருது பெற்றார். தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -
Ad imageAd image
கீர்த்தி சுரேஷ்

இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் நடித்த ”ரிவால்வர் ரீட்டா” விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது வரை இவர் பல முன்னனி நட்ச்சத்திரங்களுடன் நடித்து இருக்கிறார். அந்த வரிசையில் ரஜினிக்கு தங்கச்சியாக ”அண்ணாத்த” திரைப்படத்திலும், விஜய்க்கு ஜோடியாக ”பைரவா” மற்றும் ”சர்கார்” என இரண்டு திரைப்படத்திலும், தனுஷ்வுடன் “தொடரி” திரைப்படத்திலும், விக்ரம்வுடன் “சாமி 2” திரைப்படத்திலும், சூர்யாவுடன் “தான சேர்ந்த கூட்டம்” திரைப்படத்திலும், சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” மற்றும் “ரெமோ” என இரண்டு திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமிபத்தில் வெளியான “மாமன்னன்” திரைப்படத்திலும் உதய நிதிக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. இதை அடுத்து சமூக ஊடகங்களில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் வெளியீட்டுள்ள வீடியோவில் ”நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களை நிறைவு செய்து இருக்கிறேன். இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது தாய் – தந்தைக்கு நன்றி. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய பிரியதர்ஷனுக்கு நன்றி.

கீர்த்தி சுரேஷ்

கடவுளின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கிறது. எனது சக நடிகர்கள், டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எல்லோருக்கும் நன்றி. ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை அனைவரும் எனக்கு அமோக ஆதரவு அளித்தனர். உங்களுக்கு நன்றி. தொடர்ந்து உங்களை மகிழ்விக்கும் சிறந்த படங்களில் நடிப்பேன். இன்னும் நிறைய ஆதரவையும் அன்பையும் நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டும்” என்று பேசி உள்ளார்.

Share This Article
Leave a review