அமெரிக்கவாழ் தமிழர்களால் ₹10 கோடி அளவுக்கு நிறுவனங்களுக்கான முதலீடு செய்யப்படும் – மு.க.ஸ்டாலின்

3 Min Read
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று (02.07.2023) வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் (FeTNA) காணொலி வாயிலாக கலந்து கொண்டு ஆற்றிய ஆற்றினார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது அவர் கூறுகையில்,”வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையும் தமிழ்மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவில் காணொலி மூலமாக கலந்துகொண்டு உங்களைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தாய்த் தமிழ்நாட்டின் மீது பற்றும் திராவிடமாடல் நல்லாட்சியின் மீது நம்பிக்கையும் கொண்டு எனக்கு இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

09-01-2023 அன்று நடந்த “உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள்” மாநாட்டினை நீங்கள் நடத்தியபோது அதிலும் காணொலி மூலமாக கலந்து கொண்டு நான் உரையாற்றினேன்.
பெட்னா (FeTNA) அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசின் MSME துறையின் கீழ் இயங்கக்கூடிய டான்சிம் (TANSIM) நிறுவனம் அந்த மாநாட்டை நடத்தியது. உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் தமிழ்நாட்டில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
இந்த முன்னெடுப்பின் முதல்கட்டமாக “அமெரிக்கத் தமிழ் நிதியம்”என்ற அமெரிக்கவாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற அது ஊக்கமளிப்பதாக அமைந்தது. அந்தவகையில் ஃபெட்னா அமைப்பானது கூடிக் கலையும் அமைப்பாக இல்லாமல், கூடி உழைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

இத்தகைய ஃபெட்னா அமைப்பும், சாக்ரமெண்டோ தமிழ்மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவுக்கு வருகை தந்துள்ள உங்கள்அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கவாழ் தமிழர்கள் மட்டுமல்ல தமிழர்களும் அங்கு கூடியிருக்கிறீர்கள். பல்வேறு நாடுகளில் வாழும் ஏன், தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானவர்கள் அங்கு வந்திருப்பதாக நான் அறிகிறேன். அந்தவகையில், உலகத் தமிழ்ச் சங்கமமாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் கணக்கிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும். மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாகக் கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம். கடல் கடந்து வந்த பிறகும் தாய்மொழிக்காக விழா என்றால், மொழி என்பது நம்மைப் ரத்தமாக இருக்கிறது. அந்த எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் பொறுத்தவரையில் எழுத்தாக இல்லை, உணர்வோடுதான் நாம் கூடி இருக்கிறோம்.

‘தொன்மை தமிழரின் பெருமை’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். உலகம் தோன்றியதைக் கணிக்க முடியாதது மாதிரி தமிழின் தோற்றத்தையும், தமிழினத்தின் தோற்றத்தையும், கணிக்கமுடியாத அளவுக்கு தொன்மையான வரலாறு நமக்கு உண்டு.

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு 1968-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களிடம் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்.
“சென்ற காலத்தைச் சிந்தை செய்யும்போது உண்மையான ஒரு பெருமித உணர்ச்சியையும், வருங்காலத்தை எண்ணும்போது இடையறாத ஒரு நம்பிக்கையையும், இன்றைய இன்னல்களுக்கு இடையிலும், தமிழர்களின் உள்ளத்திலே, இவ்விழாவின் நிகழ்ச்சிகள் ஏற்றி வைத்திருக்கும் என்பதில் சிறதளவும் ஐயமில்லை. வரலாற்றுக் காலத்திற்கு முன்பு தொட்டு, வளமார் பண்பாடும், உயர் நாகரிகமும் மலிந்த ஒரு நாட்டில் இத்தகைய வெற்றியினை நாம் எதிர்பார்த்தல் இயல்பானதே” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.” எனக் கூறியுள்ளார்.

Share This Article
Leave a review