Chennai Airport: உள்ளாடைக்குள் மறைத்து 1.32 கோடி தங்கம் கடத்தல் .

1 Min Read
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 1.32 கோடி மதிப்புள்ள 2.49 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 03.05.2023 அன்று 6e-1172 என்ற விமானத்தில் கொழும்பிலிருந்து வந்த இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்த இரண்டு பெண்கள்  தடுத்து நிறுத்தப் பட்டு சோதனை செய்யப்பட்டனர். ​​ஒவ்வொரு பயணியின் உடலிலும் அரிசி வடிவில் தங்கம் அடங்கிய இரண்டு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.  ​​524 கிராம் மற்றும் 518 கிராம் எடையுள்ள 55.36 லட்சம் மதிப்புடைய 24 காரட் தூய்மையான இரண்டு தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு சோதனையில், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், 03.05.2023 அன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் எண். 6e -1002 இல் வந்திறங்கிய இரண்டு பெண் பயணிகளிடமிருந்து 300 கிராம் மற்றும் 400 கிராம் எடையுள்ள 24 காரட் எடையுள்ள 37.19 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அதே நாள் எமிரேட்ஸ் விமானம் எண். EK-546 இல் துபாயிலிருந்து வந்த ஒரு ஆணின் உடலில் மூன்று மூட்டைகளில் ரப்பர் பேஸ்ட் வடிவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 39.58 லட்சம் மதிப்புள்ள 745 கிராம் எடையுள்ள 24K தூய்மையான ஒரு தங்கக் கட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம், 1.32 கோடி மதிப்புள்ள 2.49 கிலோ எடையுள்ள தங்கம் சுங்கச் சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a review