தொழில்வரி, சொத்து மற்றும் குடிநீர் வரி வசூலிக்க ரசிது புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூபாய் 1.31 கோடி முறை கேட்டு ஈடுபட்டதாக முன்னாள் தர்மபுரி மாவட்ட ஆட்சியரும், தற்போது தமிழ்நாடு அறிவியல் நகரின் துணை தலைவராக உள்ள மலர்விழி ஐஏஎஸ் வீடு, ஒப்பந்ததாரர்கள் வீடு என பத்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாங்காத பிளீச்சிங் பவுடருக்கு ரூபாய் 30 லட்சம் கணக்கு காட்டி மோசடி செய்ததும் விசாரணையில் தெளிவாகியுள்ளது.
சென்னை அறிவியல் நகரின் துணைத் தலைவராக மலர்விழி ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார் இவர் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக கடந்த 2018 மற்றும் 20 ஆண்டுகளில் இருந்தார். அவரது பனி காலத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் ஐந்தாவது மாநில நிதி குழு மாநில நிதியிலிருந்து 2019 20ஆம் ஆண்டு கால கட்டத்தில் சொத்து வரி ரசீது புத்தகம், குடிநீர் கட்டணம் வசூல் ரசீது புத்தகம், தொழில் வரி வசூல் ரசீது புத்தகம் மற்றும் இதர கட்டண புத்தகங்கள் என 1,25,500 எண்ணிக்கையில் இரண்டு நிறுவனங்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து கிராம ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்துள்ளார்.
இந்த புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஒப்பந்த புள்ளிகளில் கோரப்படாமல் நேரடியாக அரசு விதிகளுக்கு எதிராக தனக்கு தெரிந்த நிறுவனத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்ய மலர்விழி அனுமதித்துள்ளார். மேலும் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகம் ஒன்றின் விலை ரூபாய் 40 ஆனால் கலெக்டர் மலர்விழி என்று நிறுவனங்களிடமிருந்து ஒரு புத்தகத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 135 விலைக்கு கொள்முதல் செய்துள்ளார்.
மேலும் தர்மபுரியில் உள்ள அரசு அச்சகத்தில் ரசீது புத்தகங்கள் அச்சடிக்க ரூ 50.20 லட்சம் மட்டுமே செலவானது. ஆனால் அச்சகத்தின் மூலம் புத்தகங்களை அச்சடிக்காமல் தனியார் மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தி அந்த பணத்தை ஆட்சியராக இருந்த மலர்விழி மற்றும் இரண்டு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த உரிமையாளர்களான தாஹிர் உசேன் வீரய்யா பழனிவேல் ஆகிய மூன்று பேர் கூட்டு சேர்ந்து பணத்தை கையாடல் செய்தது உறுதியாகி உள்ளது. இது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர்ந்து போலீசார் விசாரணை மற்றும் வருகின்றனர்.
1.31 கோடி முறைகேடு ஐஏஎஸ் மலர்விழி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு. காண்ட்ராக்டர் வீடுகள் உட்பட 10 இடங்களில் சோதனை. பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல். வாங்காமல் சுமார் 30 லட்சம் செலவு செய்ததாக போலி கணக்கு.

Leave a review
Leave a review