வேலூர் அடுத்த ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்துக்கு இரண்டு நாள் பயணமாக அமித்ஷா வருகை தருகிறார். அமைச்சர் வருகையொட்டி பல இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளனர் பாஜக வினர். அதில் அமித்ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் போட்டோ இடம் பெற்றுள்ளதால் பலரும் பாஜகவினரை கிண்டல் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் போஸ்டரில் இடம் பெற்றிருக்கும் பெண் நிர்வாகி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்துக்கு தான் அமித்ஷா வருகை தர உள்ளார். அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ராணிப்பேட்டை அரக்கோணம் தக்கோலம் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமித்ஷாவின் போட்டோவிற்கு பதிலாக நடிகரும் இயக்குனருமான சந்தன பாரதியின் போட்டோ இடம்பெற்றுள்ளது. அதில் சந்தன பாரதியின் போட்டோ உடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் ”இந்தியாவின் இரும்பு மனிதரே வாழும் வரலாறு வருக வருக ”என எழுதப்பட்டுள்ளது இந்த போஸ்டரில் அருள்மொழி மாநில செயற்குழு உறுப்பினர் ராணிப்பேட்டை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் பாஜகவின் தாமரை சின்னமும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில் போஸ்டரில் இடம் பெற்றுள்ள பாஜக நிர்வாகி அருள்மொழி இது தொடர்பாக இது ஏதோ திட்டமிட்ட சதி போல தெரிகிறது அந்த போஸ்டரில் என்னுடைய புகைப்படம் இடம்பெற்றுள்ளது இந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனவே அதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரை ஒட்டியது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் அமித்ஷா விற்கு பதில் நடிகர் சரந்தான பாரதியின் போட்டோவை பாஜக போஸ்டரில் இடம் பெற செய்வது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஆண்டு நாடாளூமன்ற தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த அமைச்சர் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோ இடம் பெற்று இருந்தது
ஒரு பேட்டியில் கூட நடிகர் சந்தான பாரதி பாஜகவினரை கலாய்த்திருப்பார். குழப்பம் அடைந்துள்ள பாஜகவினர் அமைச்சர் அமித்ஷாவிற்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் போட்டோவை பயன்படுத்தி கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர் என்கின்றனர்