மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய கிராம மக்கள்

0
70
முள் வேலி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி தாலுகாவுக்குட்பட்ட பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில்‌‌ 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கிராமம்  அருகே சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான 6 சென்ட் நிலமும், அவரது அண்ணன் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை சென்ட் நிலமும் இருந்தது.

இதில் நரேந்திரன் பெயரில் இருந்த இரண்டரை சென்ட் நிலத்தை கோவிலுக்கு வாங்க முடிவு செய்த பத்திகவுண்டனுார் ஆதிதிராவிடர் காலனி மக்கள் ஒன்றரை லட்சம் ரூபாய விலை பேசி 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் பெட்டப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பத்திகவுண்டனுார் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த திம்மராயன் (45) என்பவர் உதவியுடன் சிவக்குமார் மற்றும் நரேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் எட்டரை சென்ட் நிலத்தையும் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு சமீபத்தில் வாங்கினார்.

அந்த நிலத்திற்கு பிரகாஷ் முள்வேலி அமைக்க சென்ற போது கோவிலுக்கு இரண்டனை சென்ட் நிலத்தை வாங்கியிருப்பதாக மக்கள் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிலத்தை வாங்கி கொடுத்த திம்மராயன் என்பவரிடம் சென்று கேட்ட போது அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.

அவரால் தான் பிரச்சினை வந்ததாக நினைத்த கிராம மக்கள் திம்மராயன், அவரது தம்பி மற்றும் தாய் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களது வீடுகளுக்கு செல்லும் வழிப்பாதையை முள்வேலி போட்டு அடைத்தனர்.

அவர்களுடன் யார் பேசினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டும் என தீர்மானித்தனர்.

ஏற்கனவே ஒருமுறை முள்வேலியை அஞ்செட்டி போலீசார் அகற்றிய நிலையில் மீண்டும் கிராம மக்கள் முள்வேலி அமைத்துள்ளனர்.

இது தொடர்பாக திம்மராயன் கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here