மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய போலீஸ்க்கு ‘கல்தா’ கொடுத்த மதுபிரியர்…

0
59
பிரிதிவிராஜ்

மதுரையில் மது போதையில் காரை ஓட்டி வந்த நபர் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து; சுமார் இரண்டு மணி நேரம் காவல்துறைக்கு போக்குகாட்டிய போதை ஆசாமி மீது வழக்குப் பதிவு .


மதுரை காளவாசல் பகுதியிலுள்ள மேல மாசி வீதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் இவர் எல்ஐசி ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம்  இரவு அளவுக்கதிகமான மது போதையில் தனது நான்கு சக்கர வாகனத்தில் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் , போதை உச்சத்தை அடைந்ததால் அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார் .

மேலும் , பழங்காநத்தம் இருந்து காளவாசல் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில்  மோதியுள்ளார் . இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் பலத்த காயம் அடைந்தனர் . மேலும் சம்பவ பகுதியிலிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் .

இதனைத் தொடர்ந்து அதிவேகமாகக் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பிரிதிவிராஜை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறை போதை அளவிடும் கருவிகொண்டு (பிரீத் அனலைசர்) சோதனை செய்ய முற்பட்டபோது சுமார் 2 மணி நேரம் காவல்துறையினரை  போக்குகாட்டி வந்துள்ளார் .

ஒரு வழியாக பிரீத் அனலைசர் மூலமாக மது அளவு கண்டறியும் சோதனையில் அந்த போதை ஆசாமி சுமார் 253 சதவீதம்  மதுபோதையில் இருந்ததாக பிரீத் அனலைசர் கருவி காட்டியது . இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை திடீர் நகர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அவரை காவல் நிலைய அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here