பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள்.போலீஸ் பறிமுதல் ….

0
160
பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன்

தமிழகத்தில் தொடர்ந்து சமூக விரோத கும்பல்கள் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலை இருந்து வருகிறது.காவல்துறையினரும் பல கட்டுப்பாடுகள் விதித்தும் அவை கட்டுப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில்  பா.ஜ.கட்சியின் OBC பிரிவின் மாநில செயலாளராக கார்த்திகேயன்.இவருக்கு வீடு,மனை,நிலம் வாங்கி விற்க்கும தொழில் செய்து வருகிறார்.


இந்த நிலையில் இவர் , நிலம் தொடர்பாக  கருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை மிரட்டியதாக வந்த புகாரினை தொடர்ந்து நாச்சியார் கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் வீட்டில்  கடந்த 26ம் தேதி திருவிடைமருதூர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் தலைமையில் காவல்துறையினர் சோதனைமேற்கொண்டனர்.  

கைப்பற்ற ஆயுதங்கள்

சோதனையில் அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிகள், கத்தி மற்றும் ஏராளமான பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவரது சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.


தற்போது தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .
கார்த்திகேயன் மீது இரண்டு கொலை வழக்குகளும், மூன்று கொலை முயற்சி வழக்குகளும் ,கட்டப் பஞ்சாயத்து மிரட்டல் உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கார்த்திகேயன்


மேலும் நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் ரவுடிகள் பெயர் பட்டியலிலும் கார்த்திகேயன் பெயர் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.தொடர்ந்து பல இடங்களில் அரசியல் கட்சியை சேர்ந்த நபர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here