நாட்றம்பள்ளி அருகே பஞ்சராகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு மேலும் 10 பேர் படுகாயம்.

0
179

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் சாலையில் பழுதாகி நின்ற வேன்மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி (மினி லாரி) மோதியதில் வேனில் பயணித்த ஒரே கிராமத்தைச் சார்ந்த ஏழு பெண்கள் உயிரிழந்தனர் லாரி ஓட்டுனர் உட்பட மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓனாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இரண்டு வேன் மூலம் மைசூர் சுற்றுலா சென்று ஊர் திரும்பிய நிலையில் இன்று அதிகாலை நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வேன் வந்து கொண்டிருந்த பொழுது வேன் பழுதாகி சாலை ஓரமாக நின்றுள்ளது. இதில் வேனில் பயணித்த அனைவரும் வேன் பழுது பார்க்கும் நேரத்தில் வேனிலிருந்து இறங்கி சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியம் பகுதியில் அமர்ந்து இருந்துள்ளனர்.

அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற (ஈச்சர்) லாரி எதிர்பாராத விதமாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன்மீது பின்பக்கமாக பலமாக மோதியது இதில் வேனுக்கு முன்பக்கத்தில் சென்ற மீடியம் மீது அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் மோதியதில் ஏழு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த அனைவரும் பேரணாம்பட்டு அடுத்த ஓனான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் ,
மேலும் விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த நேரம் அதிகாலை என்பதாலும் விபத்து நிகழ்ந்த இடம் பார்வை குறைவான வளைவு என்பதாலும் சாலையில் வேன் நிற்பதை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் அதிவேகமாக வேன் மீது மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் சிக்கிய அனைவரும் வேனிலிருந்து இறங்கி சாலையின் ஓரமாக அமராமல் சென்டர் மீடியம் பகுதியிலேயே அமர்ந்திருந்ததும் உயிரிழப்பிற்கு காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து சம்பவ இடத்தில் நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here