அரசியல் மீது நாட்டம் ஏற்பட்ட நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியினை தொடங்கினார் . கட்சி தொடங்கி உடனே நடந்த 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி .
தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் , 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார் .
இதில் தனது கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராகக் காலம் இறங்கிய கமல்ஹாசன் , திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்குத் தள்ளி 51,481 வாக்குகளைப் பெற்றார். ஆனால் துரதிஷ்டவசமாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் தனிப்பெரும்பனையுடன் திமுக ஆட்சி அமைத்த பின்னர் , கமல்ஹாசன் திமுக – காங்கிரஸ் கட்சிகளுடன் நெருக்கம் காட்டி வருகின்றார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய நடைப்பயணத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே தனது ஆதரவை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பெரிதும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படும் வேலையில், கமல்ஹாசன் , கோவை அவினாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் தனது கட்சியின் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடன் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார் .
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கமலஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு இது குறித்து மமுடிவெடுக்கவே ஆலோசனை கூட்டம் கூட்டி இருக்கின்றோம் எனவும் , இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று
மேலும் பெங்களூரு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு , ராகுல் காந்தி தன்னை அழைத்திருப்பதாகவும் , பிரச்சாரத்திற்குச் செல்வது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார் .
மேலும் கூட்டத்தில் என்னென்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ” இது நாங்கள் ஆலசோனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் , என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம்” எனத் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தலில் தவறவிட்ட வாய்ப்பை நாடாளுமன்றத் தேர்தலில் பெறத் திட்டமா எனக் கேள்வி எழுப்பியதற்கு, இருக்கலாம் அது நல்ல எண்ணம் தானே எனப் பதில் அளித்தார்.