அடுத்தவர் காலில் விழுவது தான் தவறு-50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இருந்த கலைஞர் நினைவிடத்தில் கும்பிடுவது தவறில்லை-அதை பெருமையாக கருதுகிறேன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்லடத்தில் பரபரப்பு பேட்டி.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நாத கவுண்டம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உழவர் காவலர் என் எஸ் பழனிச்சாமி அவர்களின் நினைவு மணிமண்டபத்தில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பாஜக கட்சி நிர்வாகிகளுடன் சென்று என் ஸ் பழனிச்சாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், அவினாசி அத்திக்கடவு திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவித்தோம், இந்த ஆண்டு வரவில்லை என்றால் மீண்டும் ஒராண்டு காத்திருக்க வேண்டியிருக்கும்.

போராட்டம் அறிவித்த அடுத்த தினமே அமைச்சர் முத்துச்சாமி மீட்டிங் போட்டு முதல்வரை சந்தித்து அத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளனர்.
மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் இந்த வெற்றி விவசாயிகளுக்கானது
” பாஜக அணில் போல் வேலை செய்துள்ளோம் அத்திக்கடவு அவினாசி
இரண்டாது திட்டத்தை துவக்க வேண்டும் , இந்த வெற்றி பாஜகவின் வெற்றி என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன்… அது போன்ற அற்பத்தனமான அரசியலை நான் செய்ய மாட்டேன்” என்று பேசினார் .

மேலும் அவர் பேசுகையில் ” நீண்ட காலமாக சொல்லி வரக்கூடிய. ஆனைமலை நல்லாறு திட்டம் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தையும் கொண்டு வர தீவிரம் காட்ட வேண்டும் , மின்கட்டண போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு மணி மண்டபம் கட்ட வலியுறுத்தினோம்., இலவச மின்சாரப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு பாஜக சார்பில் நினைவு மண்டபம் கட்டித் தரப்படும் என அறிவிக்கிறோம், அந்த மண்டபம் விவசாய சங்கங்களின் பெயரில் இருக்கும்.” என்று தெரிவித்தார் .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/students-federation-of-india-and-government-college-students-boycotted-classes-to-protest-sex-crimes-at-thanjavur/
மேலும் கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா குறித்து அவர் பேசுகையில் ” கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மாநில அரசு நடத்திய விழா மத்திய அரசு பங்கேற்ற விழா , கலைஞர் நாணயத்துக்கு மாநில அரசு அனுமதி கோரியது , மத்திய மாநில அரசு விழாவாக நடந்தது , செலவினங்களை மாநில அரசு ஏற்றது , மத்திய அரசு சார்பில் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார்.அவர் பாஜக சார்பில் கலந்து கொள்ளவில்லை மத்திய அமைச்சராக பங்கேற்றார்.
கலைஞர் கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை காலில் விழுவதுதான் தவறு. 50 ஆண்டுகால வாழ்க்கையை அரசியலில் பயணித்த கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை பெருமையாக கருதுகிறேன். என்று தெரிவித்தார் .
ஆர் பி உதயகுமார் விமர்சனத்திற்கு பதிலடி : திமுக வை எதிர்க்கின்ற கட்சி பாஜக தான் .. என்மீது போடப்பட்ட வழக்கு இதுவரை திமுக தரப்பில் வாபஸ் பெறவில்லை , அதனால் எதிர் துருவமாக இருந்து திமுக பாஜக அரசியல் செய்கிறது. அதிமுக – திமுக – பாஜக பங்காளிகள்தான் ஆனால் எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை , எங்கள் தலைமையில் கூட்டாட்சி அது மாமன் மச்சான் கூட்டணி என விளக்கம் அளித்தார்.
மாமன் மச்சான் கூட்டணி என்பது வேற்றுமையில் ஒற்றுமை மாமன் மச்சான் கூட்டணிக்கு விஜய் வந்தாலும் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அவரும் மாமன் மச்சான் தான் என அண்ணாமலை பதில் அளித்தார்
மத்திய அரசு தேங்காய் விலையை குறைக்காமல் இருக்க பாரத் தேங்காய் எண்ணெய் கொண்டு வர கடிதம் எழுத உள்ளேன்
பாஜக ஆளும் மாநிலத்தில் முதலீடு ஈர்க்க முதலீட்டார்கள் ஈர்க்க முதல்வர் அழைத்தால் செல்ல நானும் தயார் .
அதே சமயம் மத்திய பிரதேச முதல்வர் இங்கு வந்த போது செல்ல எனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தார் .