இணையத்தில் டிரெண்ட் ஆக இளைஞர் செய்த செயல்.,உ.பி-யில் ஓர் சுவாரஸ்யம்.!

0
163
நவுசே அலி மற்றும் அவரது நண்பர்

உத்தரப் பிரதேசம்: இணையத்தில் டிரெண்ட் ஆவதற்காக இளைஞர்கள் சிலர் செய்யும் காரியம் மனம் பதை பதைக்க வைக்கக் கூடியதாகவும், சில நேரங்களில் முகத்தைச் சுழிக்கச் செய்யக் கூடியதாகவும் இருக்கின்றன. இந்த மாதிரியான செயல்களுக்கு காவல்துறை வெகு விரைவிலேயே  பலனாற்றி வருகின்றது. அந்த வகையில் இணையத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல், அவர்மீது காவல்துறையைக் கடும் நடவடிக்கை எடுக்க தூண்டி இருக்கின்றது.

பொதுவாக தடைச் செய்யப்பட்ட வேகத்தில் பயணிப்பது, ஆபத்தான நிலையில் பயணிப்பது மற்றும் வாகன ஸ்டண்ட் போன்ற செயல்களுக்கு காவல்துறை கடந்தகாலங்களில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. தற்போதும் நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த முறை இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பதற்கு சற்று வித்தியாசமான காரணம் உண்டு. இளைஞர் பெட்ரோல் பங்கில் வைத்து இரு சக்கர வாகனத்தை வாஷ் செய்திருக்கின்றார். சாதாரண வாஷ் என நினைத்துக் கொள்ள வேண்டாம். பெட்ரோலைக் கொண்டே அவர் வாஷ் செய்திருக்கின்றார்.

இந்த செயலுக்காகவே அந்த நபர் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இந்தியாவில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 100க்கும் அதிகமாக விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான நிலையில், அந்த இளைஞரோ அசால்டாக பெட்ரோலை ஊற்றி வாகனத்தை வாஷ் செய்திருக்கின்றார். இந்த செயலை செய்தது மட்டுமில்லாமல், அதுகுறித்த வீடியோவை இணையத்திலும் அவர் வைரலாக்கி இருக்கின்றார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து இளைஞரை போலீஸ் தற்போது கைது செய்திருக்கின்றது. அத்துடன், அவர் பெட்ரோலை ஊற்றி கழுவிய ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்கையம்
பறிமுதல் செய்திருக்கின்றனர். ரீல்ஸ் மோகத்தால் இளைஞர் பைக்கையும் இழந்து, தற்போது கம்பியையும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்.

உத்தரப் பிரதேசம், அம்ரோஹா எனும் பகுதியில் இந்த விசித்தி நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. பொட்ரோலை ஊற்றி இருசக்கர வாகனத்தை கழுவிய இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த நவுசே அலி என்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. இந்த நபர் இந்த ஓர் செயலில் மட்டுமே ஈடுபடவில்லை, இதுபோன்று இன்னும் பல ஆபத்தான செயல்களை அவர் செய்திருக்கின்றார். அதே கிளாசிக் 350 பைக்கின் மட்கார்டில் நண்பர் ஒருவரை அமர வைத்து அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி இருக்கின்றார். இதுபோல இன்னும் பல ஆபத்தான செயல்களில் அவர் ஈடுபட்டு உள்ளார். இந்த மாதிரியான சூழலிலேயே பெட்ரோலைக் கொண்டு பைக்கை வாஷ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கின்றது.

இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டே நவுசே அலி தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மிக வேகமாக தீ பிடிக்கும் திறன் கொண்டது பெட்ரோல். இது விரைவில் ஆவியாகிவிடும் என்றாலும், ஒரு சிறிய நெருப்பு பொறியே போதும் தீ பிடித்து மிகப் பெரிய தீ விபத்தை ஏற்படுத்த. இதனால்தான் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இப்போதும் எரிபொருளை நிரப்பும்போது மின்சாதன பொருட்களின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, புகைப்பிடித்தல் மற்றும்
செல்போன் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு தடைவிதிக்கின்றனர். இத்தகைய ஓர் எரிபொருளையே விளையாட்டு பொருளைபோல பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை கழுவி இருக்கிறார்
உபி-யை சேர்ந்த நவுசே அலி. நல்ல வேளையாக அந்த நேரத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆகையால் யாருக்கும் எந்த ஆபத்தும் இளைஞரின் செயலால் ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here