ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாம் 4 ஆண்டு தடை விதித்துள்ளது.
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு, 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையே தேசிய போட்டிகள் நடந்தன. அப்போது, செப்டம்பர் 30 ஆம்தேதி இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதாவிடம் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.

அதில், ஊக்க மருந்து தடுப்பு கழகம் தடை செய்த பட்டியலில் இடம் பெற்ற ரசாயன பொருளை சஞ்சிதா பயன்படுத்தி இருந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாம் விதித்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதாவின் தற்காலிக நீக்கக் காலம் ஆரம்பித்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் இந்ததடை காலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு வாய்ப்பு உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.