துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் உத்திரபிரதேசத்தில் இது போன்ற ஒரு சம்பவத்தில் பெண்தோழி உற்பட இருவர் பலியாகியுள்ளனர் .
உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் பெண் தோழியை சுட்டு கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டம் ராம்பூர் பப்புவான் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 26). இவரும் அதே பகுதியை சேர்ந்த ரேணு (20) என்பவரும் சில ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்ததக்க கூறப்படுகின்றது .
இந்நிலையில் நேற்று காலை 10.15 மணிக்கு நாகேந்திரா, தனது பெண் தோழியை திடீரென துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகேந்திரா சுட்டதில் ரேணு சம்பவ இடத்திலேயே பலியானார்.
துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.