தஞ்சை நாகநாதர் கோவிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது..!

2 Min Read

தஞ்சை நாகநாதர் கோவிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் போலிசார் கைது செய்யப்பட்டார்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சையை அடுத்த பூக்குளம் பகுதியில் பழைய திருவையாறு சாலையில் வேதவள்ளி உடனாகிய நாகநாதர் கோவில் அமைந்து உள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 12 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கத்தனர். கோயிலில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசில் புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் சந்திரா மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சாமி சிலைகளை பல இடங்களில் தேடி வந்தனர். அப்போது நாகநாதர் கோவிலின் பின்புறம் உள்ள குளத்தின் கரையில் சில சாக்கு மூட்டைகள் கிடந்துள்ளது.

12 ஐம்பொன் சிலைகள்

போலீசார் சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் மூட்டையில் சாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது. சாக்கு மூட்டையில் இருந்த 12 ஐம்பொன் சிலைகளையும் போலீசார் மீட்டனர். இந்த நிலையில் அந்த கோவிலில் உள்ள சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க நகைகள் மற்றும் 16 கிராம் வெள்ளி பொருட்களும் திருட்டு போனது என தெரியவந்தது. அந்த சாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளின் மதிப்பு ரூபாய் 54 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை கரந்தை இரட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் வயது (27) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

தஞ்சை மேற்கு காவல் நிலையம்

விசாரணையில் அவர் அளித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரனாக இருந்துள்ளது. அதனை தொடர்ந்து, விசாரணையின் போது அவர் தஞ்சை நாகநாதர் கோவிலில் இருந்த 12 ஐம்பொன் சிலைகளை ஏற்கனவே கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 9 கிராம் தங்க நகைகள் மற்றும் 16 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு போலீசார் ஆனந்தை கைது செய்தனர். அந்த நாகநாதர் கோவிலில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு நகைகள் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது .தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

Share This Article

Leave a Reply