நீரின்றி அமையாது உலகு என்ற வார்த்தைக்கு இணங்க தண்ணீர் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருவதை நாம் அறிந்தது தான். மனித சமூகத்தின் இன்றியமையாத தேவையானது தண்ணீர்.
இயற்கையாக நமக்குக் கிடைக்கும் தண்ணீரைச் சேமித்து வைத்து நம்முடைய உணவு தேவைகளை மற்றும் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் ஒரு அரிய இனம் மனித இனம். கிராமங்களில் ஏறி, குளம், கால்வாய், ஓடை, நதி எனப் பலவகையில் நாம் தண்ணீரைப் பாதுகாத்து வருகிறோம்.
ஆனால் இப்போது அந்த தண்ணீர் ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகி வருவதை நாம் பார்க்கிறோம். ஒரு பக்கம் பொய்த்துப் போகும் பருவமழை. காரணம் மழை பெறும் சூழலுக்கான காடுகளையும், மரங்களையும் பராமரிக்காமல் விட்டுவிட்டதன் விளைவு. மறுபக்கம் கனிம வளங்களைச் சுரண்டி தண்ணீர் சேமிப்பிற்கான ஆதாரத்தை அழிப்பது.

உலக தண்ணீர் தினம்
இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் அடுத்து வரும் சந்ததியினருக்குத் தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். மனிதன் உயிர் வாழத் தேவை தண்ணீரும், உணவும் தான். தண்ணீர் தான் உணவை உற்பத்தி செய்கிறது. தண்ணீர் இல்லை என்றால் உணவு உற்பத்தி சுழற்சி முறை நின்று போய்விடும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே நாம் எல்லோரும் தண்ணீரை விலை கொடுத்துத் தான் வாங்கி வருகிறோம் வசதி படைத்தவர்களுக்கு அது சாதகமாக இருந்தாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி.
எனவே மழை நீரைச் சேமிப்போம் கனிமவள சுரண்டலுக்கு எதிராக கை கோர்ப்போம் மீண்டும் சொல்லுகிறோம் ‘நீரின்றி அமையாது உலகு’.



Leave a Reply
You must be logged in to post a comment.