பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலம்! கடும் தண்டனை பெற்றுத்தர டிடிவி கோரிக்கை

1 Min Read
டிடிவி தினகரன்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள், ஒரு கும்பலால் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இருவேறு இனக்குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதலின் போது கடந்த மே மாதம் 4ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றதாக மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியின தலைவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மணிப்பூர் மாநிலம்

பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் கொடூரமான பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன்.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply