ஹாசன், ஹாசனாம்பா கோவிலில் சாமி தரிசனத்துக்காக வரிசையில் நின்ற பெண் பக்தர்களை மின்சாரம் தாக்கியது. ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் டவுனில், பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி மற்றும் இந்த கோவில் நடை திறக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களில் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2ம் தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது.
வரும் 15 ஆம் தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறந்திருக்கும். முதல் நாளான 2ம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் பணி நடந்ததால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு கோவிலில் பக்தர்கள் அனுமதி வழங்கப்பட்டது. வரும் 8வது நாளான நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். கோவில் நடை அடைக்க இன்னும் 4 நாட்களே உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் ஹாசனாம்பா கோவில் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஹாசனாம்பா கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை கோவிலை ஒட்டி ஹாசனாம்பாவை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது கோவில் அருகே அலங்காரம் செய்யப்பட்டிருந்த மின் வயர் ஒன்று அறுந்து விழுந்தது. இதில் பெண் பக்தர் வரிசையில் நின்ற ஒரு பெண் மீது மின் வயர் விழுந்தது. இதனால் அவர் உள்பட சிலர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் அவர்கள் அலறி அடித்து பின்னால் நின்றவர்கள் மீது விழுந்தனர்.

இதன் காரணமாக அவர்களுக்கும் பின்னால் நின்றவர்களுக்கும் கீழே தவறி விழுந்தனர். மேலும் மின்சாரம் தாக்கியதால் பலர் உயிரைக் காப்பாற்ற அலறியடித்து ஓடினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வயதான பெண்கள், இளம் பெண்கள் என பலர் தரையில் விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்ததுடன் ஏறி மிதித்தும் ஓடினர். கூட்ட நெரிசலில் சிக்கி தவறி விழுந்து மிதிக்கப்பட்டு, கதறி துடித்தனர். மேலும் மூச்சு திணல் ஏற்படும் அவதிப்பட்டனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, கீழே விழுந்த பெண்களை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். மொத்தம் 17 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ஆசனம் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.