பேரணாம்பட்டு அருகே காது மற்றும் கழுத்தறுக்கப்பட்டு பெண்மணி கொலை .

1 Min Read
சாலை மறியல்

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் !

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி (வயது 52) இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார் இதனிடையே நேற்று காலை மேய்ச்சலுக்காக ஆடுகளை அழைத்துக் கொண்டு விவசாய நிலங்களுக்கு  சென்றுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் நேற்று மாலை விவசாய நிலம் ஒன்றில் காது மற்றும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார் .

சாலை மறியல்

மேலும் காதில் இருந்த தங்க  கம்மலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சம்பவம்  குறித்து பேரணாம்பட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இன்று காலை பேரணாம்பட்டு காவல் நிலையம் முன்பு இறந்தவரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் டிஎஸ்பி இருதயராஜ் உட்பட போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தைை நடைத்தி  மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று தெரிவித்த பின்பு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் பேரணாம்பட்டு குடியாத்தம் சாலையில்அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Share This Article

Leave a Reply