விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே நேற்று முன்தினம் பொம்மையார்பாளையத்தில் விமல்ராஜ் என்பவர் மர்ம நபர்களால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்த ஆறு பேரில் கீழ்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துர்கா தேவி கணவரும் ஒருவர். துர்கா தேவி திமுகவின் ஒன்றிய கவுன்சிலராக தற்போது இருந்து வருகிறார்.

ஒன்றிய கவுன்சிலருடைய கணவர் கலைஞர் என்பவரை திட்டமிட்டு யாருடைய தூண்டில் பெயரிலோ கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவருடைய மனைவி துர்கா தேவி தெரிவிக்கிறார். இதனை அடுத்து கலைஞர் உட்பட 5 பேரை மொத்தம் கோட்டகுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கீழ் புத்துப்பட்டு சேர்ந்த துர்கா தேவி ஒன்றிய கவுன்சிலர் அவரது மகன் உறவினர் நாகராஜ் ரேணுகாதேவி தேவி சந்திரன், கணேஷ் உள்ளிட்ட குடும்பத்துடன் இன்று கணவர் கலைஞர் என்ற நாகராஜன் கொலை வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த வழக்கில் இருந்து அவரைவிடுவிக்க வேண்டும் எனக் கூறி அவர்கள் இன்று குடும்பத்துடன் ஆறு பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் உடன் வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவியது. அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர் மேலும் இதுகுறித்து உயர் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.