இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றி பல ஆண்களை கிறங்கடிக்க செய்து , திருமண மோசடியில் ஈடுபட ‘இன்ஸ்டா ராணி’ பொன் தேவி உற்பட மூவரை , போலீசார் கைது செய்துள்ளனர் .
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். 34 வயதான இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்ப்பது தெரிந்து கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவள்ளி ஆகியோர் சிவகாசியை சேர்ந்த பொன்தேவியை திருமணம் முடித்துள்ளனர்.அத்தோடு தரகர்கள் பொன்தேவிக்கு பெற்றோர் இல்லை சித்தி தான் வளர்த்துவருகிறார்கள் எனக்கூறியுள்ளனர்.மேலும் மாப்பிள்ளை இவருக்கு தங்கத்தாளி மற்றும் ப்ரேஸ்லேட் தங்கநகைகள் என 8 ¼ பவுனிற்கு நகைகள் போட்டுள்ளார்.

கரூரை அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள விக்னேஸ்வரனின் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று பொன்தேவியை பாலமுருகன் திருமணம் முடித்துள்ளனர்.
திருமணம் முடிந்த 3-வது நாள் சிவகாசியில் சித்தி வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி விக்னேஸ்வரனை அழைத்துக் கொண்டு பொன் தேவி சென்றுள்ளார். அங்கு சித்தியின் மகளுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு 8,500 ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு பொன்தேவி தலைமறைவாகி உள்ளனர்.
மனைவியை காணவில்லை என்று விக்னேஸ்வரன் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது , பொன் தேவிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பல ஆண்களிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு , பல ஆண்களை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதும் வெட்டவெளிச்சம் ஆனது .
பொன் தேவி ,அவருக்கு உதவியாக இருந்த தரகர்கள் பாலமுருகன் மற்றும் அமிர்தவல்லி ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசரனை மேற்கொண்டு வருகின்றனர் .
Leave a Reply
You must be logged in to post a comment.