மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு அண்ணாவின் பெயரை சூட்டுவார்களா? ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!

2 Min Read
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்

மாநிலங்களில் மாநில கட்சியை ஆள முடியும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா ஆவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என தாரக மந்திரத்தை உருவாக்கினார்.
இன்று அவரின் 115 பிறந்தநாள் விழாவும், அதனை தொடர்ந்து இன்று சர்வதேச ஜனநாயக தினமாகும். ஓலை குடிசையில் வசிக்கும் குரல் கோட்டை கொத்தளத்தில் ஒலிக்க வேண்டும்.
அதுதான் ஜனநாயகம் அதிகாரப் பகிர்வு கடைக்கோடியிலும்  இருக்க வேண்டும் என ஜனநாயகத்தை உருவாக்கினார் பேறிஞர் அண்ணா.

- Advertisement -
Ad imageAd image

ஆனால் திமுகவில் ஜனநாயகத்தை கடைபிடிக்க முடியவில்லை எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என கூறுவோம் ஆனால் இன்றைக்கு கருணாநிதி தான் குடும்பம் தான் நாட்டின் மன்னராக உள்ள நிலைமை உள்ளது. திமுகவால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி செத்துப் போய்விட்டது. திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியரால்  முடியும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்றைக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி, உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. எந்த நடவடிக்கை எடுக்கவில்லை மழை நீரால் தேங்கும் நீர்களால் ஏ.டி.எஸ் கொசு உற்பத்தி ஆகிறது.
டெங்குவை ஒழிக்க முன்னேற்ற நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. காய்ச்சல் என்றால் மருந்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். ஆனால் வீட்டுக்கு சென்ற பொழுது உயிர் பலி ஏற்பட்டு  நிலைமை மோசமாக ஆகிறது உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.

அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு கருணாநிதி பேரை சூட்டியுள்ளார். அண்ணா பெயரை சூட்ட மறுப்பது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி பெயர் மறந்து விட்டது அதை ஞாபகப்படுத்து வகையில், இது போன்ற பெயர் சூட்டும் விழாவை முதலமைச்சர் நடத்துகிறார். 

தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது ஆனால் இந்த உரிமை தொகை திட்டத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர்.
அதேபோல் இந்த ஆயிரம் ரூபாய் திட்டம் வங்கியில் இருந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது ஆனால் வங்கிகளில் பேலன்ஸ் இருக்கிறதா? ஜீரோ பேலன்ஸ் இருக்கிறதா என்று குளறுபடி ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.

Share This Article

Leave a Reply