திண்டுக்கலில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் நீதிபதி நாக்கை அறுப்பேன் என கூறியதால் பரபரப்பு. நகர் வடக்கு காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ள நிலையில் கைது செய்யப்படுவாரா திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன்.
கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டது.இதனால் ராகுல் காந்திக்கு வழங்கிய அரசு சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை (06.04.2023) திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே காங்கிரஸ் கட்சி எஸ்சி. எஸ்டி பிரிவு சார்பில் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசும்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.வர்மாவின் நாக்கை அறுப்பேன் என்று பேசியுள்ளார்.ஜனநாயக நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர் தற்போது ராகுல் காந்திக்கு தீர்ப்பு வழங்கிய நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீதிபதியின் நாக்கை அறுப்போம் என வன்முறையை தூண்டும் விதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்ட மாநகர் காங்கிரஸ் கட்சித் தலைவர் துரை மணிகண்டன் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என கேள்வி எழுந்த நிலையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார்
153.B.1A
506/1
506/2
1.தலைவர்கள் நீதிபதிகளை அவதூறாக பேசுவது.
2.அச்சுறுத்தும் வகையில் பேசுவது
3.கொலை மிரட்டல் விடுவது.உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தவிர நீதிபதிகள் சங்கம் சார்பில் டெல்லி மற்றும் குஜராத்தில் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நேற்று திண்டுக்கல் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் துரை மணிகண்டன் மீது புகார் அளிக்கப்பட்டது.
மேலும் துரை மணிகண்டன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குறும்படத்தில் நடிப்பதற்காக போலீஸ் வேடம அணிந்து உரிய அனுமதியில்லாமல் திண்டுக்கல் நகரில் வலம் வந்ததால் போலீசார் துரை மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர். அது மட்டுமல்லாமல் கடந்த அக்டோபர் மாதத்தில் மாநகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாட்டை புதைத்ததாக கட்டிடத்தின் உரிமையாளர் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இடத்தில் தோண்டி மாட்டின் உடல் உறுப்புகளை தோண்டி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இப்படி தொடர்ந்து வீண் விளம்பரத்திற்காக பந்தா காட்டி பின்னர் காவல் துறையினரின் வழக்கில் சிக்கி வாயடைத்து நிற்கிறார் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் துரை மணிகண்டன்.
Leave a Reply
You must be logged in to post a comment.