சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரான தனது கணவரின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகளை தானமாக வழங்கினார் மனைவி.
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பெயிண்டரின் உடலுக்கு அரசு சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சை அடுத்த வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர்கள் விஜயன் (56) ஜேம்ஸ் (46) இவர்கள் இருவரும் பெயின்டராக வேலை பார்த்து வந்து உள்ளனர். இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.

திருக்கானூர்பட்டி அருகில் வந்த போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதால் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் விஜயன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

படுகாயம் அடைந்த ஜேம்ஸ் உள்பட இரண்டு பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஜேம்ஸ் மூளைச்சாவு அடைந்தார்.
இந்த தகவலை மருத்துவர்கள் ஜேம்ஸ் மனைவி கில்டாவிடம் தெரிவித்து உடல் உறுப்புகள் தானம் குறித்து எடுத்து கூறினர். தன் கணவரின் உடல் உறுப்புகள் சிலரை வாழ வைக்கும் என்று எண்ணிய கில்டா ஜேம்ஸ் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தார்.

இதனை அடுத்து ஜேம்ஸ் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்பட 11 உடல் உறுப்புகள தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட ஜேம்ஸ் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

மருத்துவமனை முதல்வர், கோட்டாட்சியர் உள்பட மருத்துவர்கள் ஜேம்ஸ் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.