உல்லாசத்திற்கு வர மறுத்தால் தனது மனைவி வேறுஒருவரிடம் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு கணவன் தொடர்ந்து தனது மனைவி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதால்.
ஆத்திரத்தில் கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து விட்டு மனைவி போலீசில் சரணடைந்தார்.
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவர் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
அவருடைய மனைவி மணிமேகலை இவர் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.ரமேசுக்கு மது போதைக்கு அடிமையானவர் . அவர் அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார் .
அதுமட்டுமின்றி தனது மனைவி வேறுஒருவரிடம் தொடர்பில் இருப்பதாக கூறி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கோடை விடுமுறையையொட்டி குழந்தைகள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பே அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரமேஷ், மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னை துன்புறுத்துவதால் ஆத்திரமடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து போதையில் படுக்கையில் கிடந்த ரமேஷ்யின் தலையில் போட்டார்.
மீண்டும் அதே கல்லால் அவருடைய முகத்தில் தாக்கினார் இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பின்னர், கொலை செய்யப்பட்ட கணவரின் உடல் அருகேயே விடிய, விடிய மணிமேகலை உட்கார்ந்திருந்தார். இதையடுத்து நேற்று காலை மணிமேகலை, சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த ரமேஷ்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மணிமேகலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் வீட்டுக்கு மது குடித்து விட்டு வரும் ரமேஷ், மனைவிக்கு செக்ஸ் தொல்லையும் கொடுத்துள்ளார். மேலும் உல்லாசத்துக்கு அழைக்கும் போது செல்லவில்லை என்றால் மனைவியை வேறு ஒருவருடன் இணைத்து ஆபாசமாக பேசி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினமும் ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுப்பட்டதால் ஆத்திரம் தாங்காமல் அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு மணிமேகலை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.