Rowdy Vasool Raja கொலை ஏன்? Shocking ரிப்போர்ட் !

காஞ்சிபுரம் பகுதியில் பெரிய ரவுடியாக வேண்டும் , எளிதில் கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ராமன் , சிவா மற்றும் திலிப் குமார் ஆகிய 3 கல்லூரி மாணவர்கள் ஜாஹிரின் கொலை திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர் .

2 Min Read

சென்னை : கடத்த 11 ஆம் தேதி (11 / 03 2025 ) காஞ்சிபுரம் மாநகராட்சி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே நாட்டு வெடி குண்டுகளை வீசி கொலை செய்யப்பட்ட ரவுடி வசூல் ராஜா கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது .

- Advertisement -
Ad imageAd image

மேலும் கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜாஹீர் ஹுசைன் (25), மற்றும் ஒரே கொலையில் பெரிய ரவுடியாகிவிட வேண்டும் என்று கற்பனைக்கோட்டை கட்டி கொலையில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களுக்கு மாவுக்கட்டு பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .

ரவுடி வசூல் ராஜா கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார் சிவா, ராமன் , திலிப் குமார், சூர்யா , சுரேஷ் ஆகிய 3 தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர் .

ரவுடி வசூல் ராஜா

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜாஹீர் என்ற குற்றவாளியின் சித்தப்பா நிவாஸ் கானை கடந்த 2018 ஆம் ஆண்டு ரவுடி வசூல் ராஜாவின் கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர் . இதற்கு பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்த ஜாஹீர்க்கு கஞ்சா , பெண்கள் மற்றும் பழக்கத்திற்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் ராமன் , சிவா மற்றும் திலிப் குமார் தொடர்பு கிடைத்துள்ளது .

காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தனபால் மறைவிற்கு பிறகு காஞ்சிபுரம் பகுதியில் தாங்கள் தான் பெரிய ரவுடியாக வேண்டும் , எளிதில் கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கஞ்சா , மாது , மது உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்த ராமன் , சிவா மற்றும் திலிப் குமார் ஆகிய 3 கல்லூரி மாணவர்கள் ஜாஹிரின் கொலை திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டனர் .

அதன்படி கடந்த 11 ஆம் தேதி தனது காதலியை சந்திக்க தனிமையில் எந்த ஆயுதமும் இன்றி காத்திருந்த ரவுடி வசூல் ராஜாவை இந்த கும்பல் இரண்டு முறை நாடு வெடிகுண்டுகளை வீசி கொலைசெய்ததும் பின்னர் அவனது மரணத்தை உறுதி செய்ய கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர் .

ரவுடி வசூல் ராஜாவின் கொலையில் , ரவுடி தியாகுவிற்கு பெரிய பங்கு இருப்பதாகவும் , தியாகு தான் இந்த கும்புளுக்கு வசூல் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது .

தற்போது தலைமறிவாகவுள்ள ரவுடி தியாகுவை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர் .

Share This Article

Leave a Reply