- ஊட்டியில் காட்டெருமைகள் வேட்டையாடப்படுவது குறித்த விசாரணையை ஏன் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி ஏன் உத்தரவிட கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்
- சிறப்பு புலானாய்வு குழு நாளைக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு-நீதிபதிகள் சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு.
- ஊட்டி நடுவட்டம் பகுதியில் காட்டெருமைகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அது தொடர்பான புகாரில் உரிய விசாரணை வனத்துறை நடத்தவில்லை என வனவிலங்கு நல ஆர்வலர்கள் வழக்கு
- விசாரணையை சிபிசிஐடி அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றவும் கோரிக்கை – வனவிலங்கு நல ஆர்வலர்கள்
காட்டெருமை மாடுகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க ஏன் உத்தரவிட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஊட்டி நடுவட்டம் பகுதியில், காட்டு எருமை மாடுகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக வனத்துறைக்கு புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், விசாரணையை சிபிசிஐடி அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்ற உத்தரவிடக் கோரி வன விலங்கு ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணை வந்தது அப்போது, வன விலங்கு ஆர்வலர் தரப்பில், ஊட்டி நடுவட்டம் பகுதியில் திட்டமிட்டு காட்டெருமைகள் வேட்டையாடப்படுவதாகவும், அதன் மாமிசம் ஏற்றுமதி செய்த 3 பேர் மட்டுமே இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் தொடர்ந்து காட்டெருமைகள் வேட்டையாடப்படுவது குறித்து வனத்துறைக்கு புகார் அளித்தும் அது குறித்து முறையான விசாரணை நடைப்பெறவில்லை என்பதால் வழக்கை சிபிசிஐடி அல்லது வேறு அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், காட்டெருமைகள் வேட்டையாடப்படுவது குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பி இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.