ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் இடையே வியட்நாம் நாட்டின் பிரதமர் மேதகு ஃபாம் மின் சின்-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு விரிவான கேந்திர கூட்டுமுயற்சியில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆலோசித்தார்கள். உயர்நிலை பரிமாற்றங்களை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை வலுப்படுத்தவும் தலைவர்கள் இசைவு தெரிவித்தனர்.
பாதுகாப்பு, நெகிழ்த்திறன் விநியோக சங்கிலிகளின் கட்டமைப்பு, எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவு உள்ளிட்ட துறைகளில் உள்ள வாய்ப்புகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
பிராந்திய வளர்ச்சி குறித்து நேர்மறையான கருத்துக்களை தலைவர்கள் பரிமாறிக் கொண்டனர். ஆசியான் மற்றும் இந்தோ- பசிபிக் ஒத்துழைப்பு பற்றியும் ஆலோசித்தார்கள்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் பற்றி வியட்நாம் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு, உலகளாவிய தெற்கு பகுதிகளின் பிரச்சினைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.