- கூலிப்” உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? நீதிமன்றம் கேள்வி எழுப்பிய வழக்கு.

ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் குட்கா “கூலிப்” உள்ளிட்ட போதை பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும் என தெரியவில்லை? தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும்.- நீதிபதி வேதனை. கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. – அரசு தரப்பு. 132 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 36 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது” – அரசு தரப்பில் அறிக்கை தாக்கல். ஒன்றிய, அரசு தரப்பு மற்றும் கூலிப் உள்ளிட்ட குட்கா நிறுவனங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. ஜாமின் மற்றும் முன் ஜாமின் கோரும் வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, “கூலிப்” உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக கூலிப் நிறுவனம் மற்றும் ஹரியானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த குட்கா தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நிதி அறிக்கை தாக்கல் செய்தார் அதில் ” கடந்த 9 மாதங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 132 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 36 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு மாநிலத்தில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய பொருள் என தடை செய்யப்பட்ட பிறகு அது மற்ற மாநிலத்திற்கும் அது பொருந்தும் எனவே இதில் ஒன்றிய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, “கூலிப் போன்ற புகையிலை போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் 2 ஆண்டுகளில் அதற்கு பழகி விடுவதால், அதைவிட மோசமான போதை பொருட்களை தேடிச் செல்லும் அபாயம் உள்ளது. இது உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இளம் தலைமுறையினரை பாதிப்பிற்கு உள்ளாக்கும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஒருவர் தொடர்ச்சியாக பள்ளியில் கழிவறைகள் உள்ளிட்ட பள்ளியின் வளாகங்களில் போதைப் பொருள் தொடர்பான பொருட்கள் எனும் கிடக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும். கடைகளில் இது போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற வேறு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என முடிவெடுக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும் என தெரியவில்லை? தெரிந்தே தவறு செய்யும் பெரியவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும். ஆனால் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை” என குறிப்பிட்டார். ஒன்றிய ,தரப்பில் கூடுதல் விவரங்களை பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது.அதையடுத்து நீதிபதி, ” ஒன்றிய, அரசுகள் மற்றும் கூலிப் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.