அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் !!
அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எல்லாம் எதிர்கட்சிகளுக்கு மட்டும் தான் அதானி, அம்பானிக்கு பொருந்தாது என இதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.