இப்ப தான் நான் vao, சின்ன வயசுல இருந்தே பெரிய ரவுடி, என்ன பார்த்து அலறாத போலீஸ் ஸ்டேஷன் ஹே இல்ல, பெரிய பெரிய அரசியல் பிரதிநிதிகள் எல்லாம் என்ன சாமின்னு தான் கூப்பிடுவாங்க. நான் நெனச்ச உன்ன தீர்த்து கட்டிடுவேன் என ஒரு கிராம நிர்வாக அலுவலர், பழங்குடி இருளர் விதவை பெண்ணை தன் ஆசைக்கு இணங்கும்படி மிரட்டும் ஆடியோ தற்போது Social Media – வில், வைரல் ஆகி வருகிறது.
ஏன் கூட 5 நிமிஷம் அட்ஜஸ்ட் பண்ண முடியலைன்னா செத்து போயிடு என threaten செய்து, செல்போனில் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவரும் கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அப்பாவி விதவை பெண் காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா நல்லாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா இவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். அதனைத் தொடர்ந்து சங்கீதா கிராம நிர்வாக அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் உன் கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது , சான்றிதழ் எடுப்பது சிரமம் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சமாக கொடு என்று கேட்டுள்ளார். அவர் கேட்ட லஞ்ச பணத்தை கொடுத்த பின்னரும், “உன்னை நான் தனிமையில் சந்திக்க வேண்டும், என் கூட adjust பண்ணா உனக்கு வேண்டிய certificate -ஐ உடனே தயார் செய்து தருவேன், ஆனா நான் பேசுனத யார்கிட்டயாவது Record பண்ணி காமிச்ச, நீ உயிரோட வே வாழ முடியாது என்று மிரட்டி வந்துள்ளார்.

இதற்கு சங்கீதா ஏதும் பதில் கூறாமல் இருக்கவே மீண்டும் சங்கீதா கைபேசிக்கு தொடர்பு கொண்ட ஆரோக்யதாஸ் தமிழக அரசாங்கம் விதவைகளுக்கு தரும் உதவித் தொகையை வாங்கித் தருகிறேன் என்று அவரே சங்கீதாவின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். சங்கீதாவும் அதன்படி இ- சேவை மையத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில் இரவு நேரத்தில் அடிக்கடி போன் செய்து உன் கணவர் தான் இல்லையே என்னுடன் ஐந்து நிமிடம் சுகத்திற்கு வா என்று அழைத்துள்ளார். “நான் அப்படி இல்லை என்று பல முறை சொல்லியும் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ், சங்கீதாவிற்கு தொடர்ந்து phone -இல், பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக சங்கீதா தன் தம்பியிடம் தெரிவித்துள்ளார். சங்கீதாவின் தம்பி கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை தட்டி கேட்டுள்ளார். அதற்கு சங்கீதாவின் தம்பிக்கும் ஆரோக்கியதாஸ் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். அவரது ஆசைக்கு இனங்க மறுத்தால் சங்கீதாவின் உதவித்தொகை மனுவை நிராகரித்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து தனக்கு தொலைபேசியில் பாலியல் தொந்தரவு கொடுத்துவரும் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்யதாஸ் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த அப்பாவி பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த விதவை பெண்மணி, சங்கீதா. உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவரிடம் தரிக்கட்ட தனமாக பேசிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.