அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒரிஜனல் அதிமுக காரர் கிடையாது, திமுகவிலிருந்து வந்தவர்-ஆர். வைத்தியலிங்கம்

1 Min Read
ஆர். வைத்தியலிங்கம்

தருமபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சவால்  அதிமுக முன்னாள் அமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமன ஆர். வைத்தியலிங்கம்.

- Advertisement -
Ad imageAd image

தருமபுரியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலேசானைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.  வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது…

சாதாரண அமைச்சராக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி, ஞாபகத்தோடு இருந்தார், முதலமைச்சரான பிறகு அவருக்கு புத்தி பேதலித்து விட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒரிஜனல் அதிமுக காரர் கிடையாது, திமுகவிலிருந்து வந்தவர். தினகரனிடம் வேலை பார்த்தவர் தான் காமராஜ், என்னை பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் காமராஜூக்கு இல்லை, ஒரே மேடையில் அதிமுக பற்றியோ, அரசியல் பற்றியோ, அவரது அவரது குடும்பத்தை பற்றியோ  விவாதிக்க தயார் எங்கே எப்போது தேதி செல்லட்டும்.

காமராஜை சொந்த தொகுதியில் மன்னார்குடியில் நின்று டெபாசிட் வாங்கி காட்டட்டும், மனிதனா, ஆண் மகனா என காட்டட்டும் பார்க்கலாம்.என்றார் மேலும் பேசிய அவர்

சசிகலாவை விமர்சனம் செய்தது குறித்து  செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டபோது, அதற்கு பதில் எதும் அளிக்காமல்  வேறு கேள்வி கேளுங்கள் என கடந்து சென்றார். வைத்தியலிங்கம்.

அதிமுக கொடியை கட்டக்கூடாது என நீதிமன்றம் சொல்லவில்லை. ஜன நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், மாநாடு நடத்தலாம் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என்றார். இடைமறித்த பெங்களூர் புகழேந்தி காமராஜ் ஜெயலுக்கு போவது உறுதி என்று கூறி அதற்கான காரணத்தயைும் தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply