தமிழக அரசு எதை செய்தாலும் குறை கூறுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது – கே. எஸ் அழகிரி பேட்டி..!

2 Min Read

தமிழ்நாடு அரசு எதை செய்தாலும் குறை கூறுவதற்கு மட்டுமே ஒரு கூட்டம் இருக்கிறது. அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி பேட்டி அளித்தார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றியை அடையும். தமிழக அரசு எதை செய்தாலும் குறை கூறுவதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. அதை பெரிதாக கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என கே.எஸ் அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி;- தமிழகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றியை அடையும்.

கே.எஸ் அழகிரி

இதன் காரணம், தமிழகத்தில் மிகையான மின்சாரம் கிடைக்கிறது. தமிழகத்தில் சாலை போக்குவரத்து இரயில் போக்குவரத்து நன்றாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள் ஏராளமாக கிடைக்கிறார்கள். இதில் தொழில் உறவு நன்றாக இருக்கிறது. அப்போது மாநில அரசாங்கம் தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். சீனாவில் எப்படி ஒரு மாபெரும் தொழில் புரட்சி ஏற்பட்டதோ, அதேபோன்று ஒரு தொழில் புரட்சி தமிழகத்தில் உருவாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முயற்சிக்கிறார். கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால் எதற்காக கடன் வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும். உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்க வாங்கி இருந்தால் வரவேற்கலாம்.

தமிழக அரசு

சீனாவில் பென்சியோ பின் அந்த புரட்சியை செய்தார். தமிழகத்தின் பென்சியோ பின்னாக, மு.க ஸ்டாலின் இருக்கிறார். இந்த தொழில் உறவு மேம்படும். இதனால் மகத்தான வளர்ச்சி கிடைக்கும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வளர்ச்சிக்கான ஒன்று. சென்னை தலைநகரத்தில் கூட்டத்தை குறைப்பதற்காக, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக செய்யக்கூடிய ஒரு செயல். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் துணை நகரங்களை அமைக்கிறார்கள்.

அப்போது பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் எல்லாம் நகரத்தின் வெளியில் கொண்டு வைக்கிறார்கள். இதெல்லாம் மிகவும் அவசியம். “இந்த அரசு எதை செய்தாலும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டம் இருக்கிறது. எனவே அந்த கூட்டம் சொல்வதை பெரிதாக கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. பின்னர் ஒரு வேலை செய்தால், அதை குறை கூறுவது தவறு. அதை வன்மையாக கண்டிக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article

Leave a Reply