ரூ 4000 கோடி நிதி என்ன ஆனது? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி.

2 Min Read
மழை நீர்

சென்னையில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளைக் கூட வழங்க முடியாத சூழல் நிலவுகிறது.பல இடங்களில் இன்னமும் தண்ணீர் வடியாத நிலையே உள்ளது.ஒரு பக்கம் அரசு அதற்கான வேலைகளை செய்து வந்தாலும் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் ரூ 4000 கோடி நிதி கொண்டு வந்தது நாங்க, தி.மு.க அரசு முறையாக வேலை செய்யாததால் வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது என்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்
“அ.தி.மு.க ஆட்சியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு சரியான அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது முகாம்களில் கூட உணவு , மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி

ரூ 4000 கோடி நிதி கொண்டு வந்தது நாங்க எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசு முறையாக வேலை செய்யாததால் வெள்ளம் வடியவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “

சென்னை வானிலை ஆய்வு மையம் உரிய வகையில் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் தி.மு.க அரசு திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கவில்லை” என்றார்.மேலும், “சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்” என்றார்.தொடர்ந்து, “ரூ.4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதாக கூறியது என்ன ஆனது? என்றும் கேள்வியெழுப்பினார்.

பழனிச்சாமி

இதையடுத்து, “நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை; மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்றும் கூறினார்.தொடர்ந்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் பருவமழை தொடங்கும் முன்பே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன” என்றார்.

மேலும், அதிமுக ஆட்சியின் திட்டங்களால் இந்த 4 ஆயிரம் கோடி திட்டப் பணிகள் வந்ததாகவும், தற்போது திமுக அரசின் திட்டங்களால் மக்களுக்கு பயன் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை, “மிக்ஜாம்” புயலாக வலுப்பெற்றது.புயல் காரணமாக மழை பெய்தது இதனால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்துள்ளது.

Share This Article

Leave a Reply