என்ன செய்தார் எம்.பி., திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி.!

4 Min Read
திருவள்ளூர் பெயர் பலகை

எங்களுடைய மிக நீண்ட நாள் கனவான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வருவதில் அவருடைய பங்கு பெரிய அளவில் இருந்தது  -அப்துல் சலாம்

- Advertisement -
Ad imageAd image

இந்த பகுதி மக்களின் மிகப்பெரிய கோரிக்கையாக இருப்பது ஒரு செவிலியர் கல்லூரி அதையும் செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்  -கலைவாணி

படித்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு தான் ஒரு குறையாக இருந்து வருகிறது.     -தமிழ்வளவன்

சென்னையை அடுத்து மிக அருகில் உள்ள தொகுதி திருவள்ளூர் மக்களவை தொகுதி.கடந்த 1951 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி இயங்கி வருகிறது.

இது வரை இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

1951 மரகதம் சந்திரசேகர் காங்
1957 ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு காங்
1962 ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு காங்
2009 பி.வேணுகோபால்  அதிமுக
2014  பி.வேணுகோபால்  அதிமுக
2019 டாக்டர் ஜெயக்குமார் காங்

கடந்த முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.அந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள்.

2019  

டாக்டர் ஜெயக்குமார் காங்     — 7,67,392

பி.வேணுகோபால்  அதிமுக   — 4,10,337  

பேருந்து நிலையம்

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி(தனி), பூந்தமல்லி(தனி), திருவள்ளூர், ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி. இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும்.

ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர் புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் சேர்த்து 2009ஆம் ஆண்டு திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

தொகுதி சீரமைப்புக்குப்பின் இரண்டு முறை நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டபின் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் அதிமுகவின் பி.வேணுகோபால், திமுகவின் காயத்ரியை விட 31,673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

நீதி மன்ற வளாகம்

அதன்பின் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் 6,28,499 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் 3,05,069 வாக்குகளையே பெற்றார்.

தொகுதியின்   விவரம்

தமிழகத்தின் முக்கிய மக்களவை தொகுதியில் திருவள்ளூர் தொகுதியும் ஒன்று.சென்னையை அடுத்த முக்கிய நகரங்களை உள்ளடக்கியது இந்த தொகுதி.இந்த தொகுதி ஆந்திரமாநிலத்தின் எல்லையை ஒட்டி இந்த தொகுதி இருப்பதால் இங்கு தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம். மேலும் இங்கு ஆதிதிராவிட மக்களும் வன்னியர்களும் கணிசமாக உள்ளனர்.

அதிக அளவு கிராமம் மற்றும் நகரம் ஆகிய இரண்டின் அம்சங்களையும் கலவையாக கொண்டதுதான் திருவள்ளூர் தொகுதி. திருவள்ளூர் தொகுதியை பொறுத்தவரை பல தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன.தொகுதியை சார்ந்தவர்களை தவிர வட மாநிலத்தவர் அதிக அளவு தொழிற்சாலைகளில் பணியாற்றுவதை தொகுதி முழுவதும் காணமுடிகிறது.

தொழிற்சாலைகள் பல உள்ளபோதிலும் இந்த இந்த தொகுயின் பெரும்பகுதி விவசாயத்தையே  நம்பி உள்ளது. நெல், பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை ஆகியவை இந்த பகுதியின் முக்கிய பயிர் வகைகளாக உள்ளன.பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிரம்பிய தொகுதி திருவள்ளூர்.தொகுதியில் மாவட்ட நீதி மன்றம்,அரசு மாவட்ட மருத்துவமணை,முக்கிய நகரங்களை,கிராமங்களை இணைக்கும் பேருந்து நிலையங்கள் உள்ளன.

மருத்துவமனை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது. இத்துடன் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 108 வைணவ தலங்களில் ஒன்றாக திகழும் வீரராகவ பெருமாள் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஆகியவை தொகுதியின் முக்கிய அடையாமாக உள்ளன.

திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புறவழிச்சாலை அமைக்க வேண்டும். பைபாஸ் சாலை அமைக்க வேண்டும். மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும் ஏரி, குளங்களுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும், தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

இந்த தொகுதியில் பல நீர்நிலைகள் இருந்தாலும் குடிநீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உள்ளது.

அடையாறு மற்றும் கூவம் ஆற்றைக்காட்டிலும் பெரிய ஆறாக சொல்லப்படுகின்ற கொசஸ்தலை திருவள்ளூரில்தான் உள்ளது.

அந்த ஆற்றின் இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதும், சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் இங்கு கொட்டப்படுவதும் இந்த பகுதியின் நீண்டநாள் பிரச்சனையாக உள்ளன.

அதுமட்டுமல்லாமல் ஆறு பகுதி கடலில் சேரும் இடமான கழிமுகப் பகுதி அழிவின் விளிம்பில் இருப்பதால் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்கி விடுகிறது. அந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

தொடரும்..

(தற்போதைய மக்களவை உறுப்பினர் பற்றியும் அவர் என்ன செய்தார் என்பது பற்றியும் அடுத்த வாரம் ஞாயிற்று கிழமை பார்க்கலாம்)

Share This Article

Leave a Reply